மெரினாவில் பீட்டா அமைப்புக்கு பாடை கட்டி ஊர்வலம் நடத்திய மாணவர்கள்!மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டாவுக்கு மாணவர்கள் பாடைகட்டி ஊர்வலம் நடதினர். இந்தியாவில் பீட்டாவை தடைசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


மெரினாவில் பீட்டா அமைப்புக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பீட்டாவுக்கு அவர்கள் பாடை கட்டி ஊர்வலம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும் பீட்டாவுக்கு தடைவிதிக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. சென்னையிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தலைநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் மெரினாவுக்கு திரண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக்கோரி அவர்கள் பாடைக் கட்டி ஊர்வலம் நடத்தினர்.
அப்போது பீட்டா அமைப்புக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டத்துக்கு திருநங்கைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.