வேலைவாய்ப்பு முகாம் !தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், படித்த ஆண், பெண் இருபாலருக்கான கட்டணமில்லாத வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 07.01.2017 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு கும்பகோணம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில்  நடைபெற உள்ளது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்களான மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகிய வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.

இதில் கலந்து கொள்ள விரும்பும் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள 10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, தொழிற்கல்வி, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த   இளைஞர்கள், இளம் பெண்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சுயகுறிப்பு (Bio Data) புகைப்படம் ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் கும்பகோணம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.