உத்தரபிரதேச தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி : போட்டி வேட்பாளர்களை அறிவித்த இந்து அமைப்புஉத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் இந்து யுவ வாஹினி என்ற அமைப்பு களத்தில் குதித்து இருப்பது பாஜகவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச நிலம், ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு வசதி உள்ளிட்ட சலுகைகளுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பாரதிய ஜனதா கட்சி உத்தரபிரதேச தேர்தல் களத்தில் தீவிர பிரச்சாரத்தில ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அந்த கட்சியின் கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்களை கொண்ட இந்து யுவ வாஹினி என்ற அமைப்பு தனியாக குஷிநகர், மகராஷ், கன்ஞ், உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளுடன் களம் இறங்கியுள்ள பாஜக உத்தரபிரதேசத்தில் படுதோல்வி அடையும் என்பது உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆதித்யநாத்தை உத்தரபிரதேச முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததுடன் தேர்தல் பணி குழுவிலும் அவருக்கு இடம் அளிக்கவில்லை.

இதனால் பாஜக தலைமை ஆதித்ய நாத்தை அவமதித்ததாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தின் முக்கிய நட்சத்திர பேச்சாளரான ஆதித்யநாத்தின் ஆதரவாளர்களின் திடீர் போர்க்கொடி பாஜகவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.