மர்ம பேய்ச்சுறா! தெரியுமா உங்களுக்குஅண்மையில் அமெரிக்க கடல் ஆராய்ச்சியாளர்கள் கலிஃபோர்னியா மற்றும் ஹவாய் கடல்பகுதியில் ஆழமாகச்  சென்று செய்த ஆராய்ச்சியின் விளைவாக, இதுவரை யார் கண்ணிலும் பார்க்க கிடைக்காத பேய்ச்சுறாவை முதன்முறையாக அடையாளம் கண்டு வந்திருக்கிறார்கள்.

மான்டெரி விரிகுடா மீன் பண்ணை ஆராய்ச்சி மையம் ஆராய்ச்சியாளர்கள் ரிமோட் மூலம் ஒரு வண்டியை 2 ஆயிரம் மீட்டர்கள் ஆழத்தில் உள்ளே இறக்கி ஆராய்ச்சி செய்தபோதுதான் அவர்களது கேமராவில் பேய்ச்சுறா மாட்டியிருக்கிறது. 

சிமேராஸ் என்று அழைக்கப்படும் இந்த மீன்கள் ஷார்க்ஸோடு தொடர்புடையன. அது சரி ஏன் பேய்ச்சுறா என்ற பெயர்? கடலில் 2600 மீட்டர் ஆழத்தில் வாழும் இவற்றுக்கு பற்கள் கிடையாது. அதற்கு பதிலாக வலுவான ஈறுகள் உண்டு. தலையும் வாயும் ஒன்றிணைந்து கந்தல்துணி பொம்மை போல இருப்பதால்தான் இந்தப்பெயர். 150 செ.மீ நீளம் வளரும் பேய்ச்சுறாவின் பாலுறுப்பு தலையில் உள்ளிழுக்கும்படியாக அமைந்துள்ளது.  

இந்த சுறாவை 2009 ஆம் ஆண்டிலேயே  ஆராய்ச்சியாளர்கள் படம் எடுத்து விட்டாலும் அது பேய்ச்சுறாதானா என்பதை ஆராய்ந்து கண்டுபிடிக்கவே இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டிருக்கின்றன. பேய்ச்சுறா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களில் மட்டும் காணப்படுபவையாகும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.