குடியரசு தினவிழாவில் ஐக்கிய அரபு அமீரக படையும் அணிவகுப்பு செய்தது ... காவி தீவிர வாதிகள் வாயில் மண்குடியரசு தினவிழாவில் அரபு நாட்டுப்படையா! எங்கப்பா!! இந்த பொன்னார் சு சுவாமி எச்ச ராஜா... கல்யாண ராமன் எல்லாம்

தமிழக ஜல்லிக்கட்டு போராட்டத்தில்  சாதி மதம் பாராமல் பலதரப்பு மக்களும் ஆதரவு கொடுத்து  போராடி வெற்றியும் பெற்று விட்டார்கள்
இதை  பொறுக்க முடியாத  மத்திய மாநில ஊடக அதிகார வர்க்கத்தினார்கள் போராட்டத்தை கொச்சை படுத்தி விஷம கருத்துக்களை  பரப்பிவருகிறார்கள்  அதில்   பொன்னார்  சு சுவாமி  எச்ச ராஜா...கல்யாண ராமன் போன்ற காவி கலவர கும்பல்   குறிப்பிடத்தக்கவர்கள்  அப்படி பட்டவர்கள் இந்த நிகழ்வை எப்படி பார்ப்பார்கள்...  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியத்தையே பொறுக்காமல் இந்து முஸ்லிம்கள்  இணைந்து விட்டனர் என்று   கொச்சை படுத்தி  பேசினார்கள் இந்த நிகழ்வை  பார்த்தவுடன்  தங்களுடைய எல்லா ஓட்டைகளையும் மூடிக்கிட்டு ஒன்னும் தெரியாதவர்கள் போல் நடிக்கிறார்கள் இதற்கும் எதாவது சமாளிக்க  யாரையாவது  குறை கூறுவார்கள்

நம் இந்தியாவின் 68வது குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

இதனையடுத்து, டெல்லி ராஜ்பாத்தில் முப்படைபடைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.


இந்நிலையில், குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சையது அல் நஹ்யன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இவரை கவுரவிக்கும் வகையில் அரபு நாட்டு படையினரின் குடியரசு தினவிழாவில் கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதை நடத்தினர்.

இந்திய குடியரசு தினவிழாவில் அரபு நாட்டுப் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது இதுவே முதல் முறையாகும். இதில் 179 படை வீரர்கள் கலந்துகொண்டனர். இது நம் நாட்டிற்கு பெருமைக்குரிய விஷயமாகவும் கருதப்படுகிறது.

இந்த அணிவகுப்பு மரியாதையை குடியரசு தினவிழாவை கண்டுகளித்த மக்கள் அனைவரும் வியப்பாக பார்த்து ரசித்தனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.