துபாயில் நடந்த சமூக நல்லிணக்க மாநாட்டில் மா ஜா க . எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி உரை ! படங்கள் இணைப்புஐக்கிய அரபு அமீரகம்- துபாயில் மனிதநேய கலாச்சாரப் பேரவையின் சார்பில் சமூக நல்லிணக்க மாநாடு தனியார் பள்ளி உள் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அவ்வமைப்பின் அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அமீரக பொருளாளர் அதிரை அஸ்ரப், IKP செயலாளர் அப்துல் ரஹ்மான், அமீரக துணைச் செயலாளர்கள் அசாலி அஹமது, அபுல் ஹசன்,பத்தாஹீல்லாஹ், அமீரக ஊடக பிரிவு செயலாளர் ஜியாவுல்ஹக்,அமீரக மூத்த ஆலோசகர் சர்புதீன், அனைத்து மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அபுதாபி IKP செயலாளர் சபியுல்லா மன்பஈ இறைவசனத்துடன் துவக்கினார், அமீரக துணைச் செயலாளர் அப்துல் ரெஜாக் வரவேற்புரை நிகழ்த்தினார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயர் மாநாட்டு அரங்கத்திற்கு சூட்டப்பட்டிருந்தது.

மாநாட்டில், ஆலியா டிரேடிங் நிர்வாக இயக்ககுநர் சேக்தாவூது, ஆரிபா குழுமம் நிர்வாக இயக்குனர் தோப்புத்துறை சுல்தானுல் ஆரிப், மணமேல்குடி நஜிமுத்தீன்,அபுதாபி தமிழ் சங்கம் ரெஜினால்ட் சாம்ஸன்,சமூக ஆர்வலர் சுகைபூதீன்,இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலிகான்,சமூக ஆர்வலர் குத்தாலம் அஷ்ரப்,மர்ஹபா வெல்பேர் அசோசியேசன் ரஃபி அஹமது, அபுதாபி லால்பேட்டை ஜமாத் தலைவர் யாசர் அரபாத், நாகை மெய்தீன், தொழிலதிபர் சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், துணைப் பொதுச்செயலாளர்கள் மைதீன் உலவி,மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோர் பங்கேற்று எழுச்சி உரை நிகழ்த்தினர்.

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சமூகத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநாட்டில் கேள்வி-பதில் நிகழ்ச்சி  நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிவில் துபை மண்டல செயலாளர் யூசுப்ஷா நன்றி கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.