முத்துப்பேட்டையில் பரபரப்பு: காவல் நிலையத்தை மக்கள் முற்றுகை மர்மகும்பலை கைது செய்யக்கோரிமுத்துப்பேட்டை அருகே மினிலாரி டிரைவரை தாக்கி விட்டு தப்பிய மர்மகும்பலை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காட்டை சேர்ந்தவர் இந்திரா. நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தேங்காய்வாடியில் வேலை பார்த்து விட்டு மினிலாரியில் வீடு திரும்பினார். வேனில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மகேஸ்வரி, வசந்தா, அமுதவள்ளி மற்றும் அவரது மகன் வெங்கடேசனும் சென்றனர்.

இந்திராவின் கணவர் செல்வராஜ், மினிலாரியை ஓட்டி சென்றார். ஏரிக்கரை பாலம் அருகே வேன் சென்றபோத அரிவாள், கம்பு மற்றும் ஆயுதங்களுடன் 10 மேற்பட்டோர் பைக்குகளில் வந்து வழிமறித்து நிறுத்தி வெங்கடேசை தாக்கி விட்டு தப்பினர்.
இந்நிலையில் எம்.கே.நகர் காலனி பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்த பாலமுருகன், அன்பழகன், தினேஷ், விக்னேஷ், யாதவ்ராஜா, மனோகரன், அருள்பாண்டியன், அறிவழகன் ஆகியோரையும் அதே கும்பல் மிரட்டி தாக்கியது. இதில் காயமடைந்தவர்கள் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மர்ம கும்பலை கைது செய்யக்கோரி பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தாக்குதலுக்கு உள்ளான இந்திரா மற்றும் பாலமுருகன் ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.