தபால் துறையின் வங்கி சேவைக்கு அனுமதி..!தபால் துறையின் வங்கி சேவைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே, ஏர்டெல், பேடிஎம் என்ற இரு பேமென்ட் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இவற்றின் மூலம் ஏராளமானவர்கள் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழியில், இப்போது மூன்றாவதாக  தபால் துறையின் பேமென்ட் வங்கி சேவைக்கு கடந்த 20ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம் நாட்டிலுள்ள 650 மாவட்டங்களில் 1.54 அஞ்சலகங்கள் மூலமாக,  மார்ச் 31ம் தேதி முதல் இதன் சேவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

தபால் துறையின் இப்புதிய பிரிவுக்கு தற்காலிக தலைமை அதிகாரியாக ஏ.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1986ம் ஆண்டு தேர்வான தபால் சேவை பிரிவு அதிகாரி ஆவார். பேமென்ட்  வங்கி   ₹1 லட்சம் வரையிலான சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளை கையாளலாம். அத்துடன் டிஜிட்டல் வாயிலான பேமென்ட் செலுத்துவது, பணபரிமாற்றம், வாடிக்கையாளர் சார்பாக பணம் செலுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடும்.  இதன் வங்கி சேவைகள் தபால்காரர் மூலம் அளிக்கப்படும். இதற்காக அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது…
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.