தலாக் சான்றிதழ் கொடுக்கக் கூடாது.. ஹாஜிக்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவுதலாக் சான்றிதழ் கொடுக்கக் கூடாது என்று ஹாஜிக்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹாஜிக்கள் கொடுக்கும் சான்றிதழுக்கு அங்கீகாரமும் கிடையாது என்று ஐகோர்ட் கூறியுள்ளது.

சென்னை: தமிழகம் முழுவதும் ஹாஜிக்கள் தலாக் சான்று வழங்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

தலாக் தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ பதர் சையித் தொடர்ந்திருந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

விசாரிணையின் முடிவில், இஸ்லாமிய திருமணங்களை ரத்து செய்யும் தலாக்கிற்கு சான்று வழங்க நீதிபதிகள் தடை விதித்தனர். அதே போன்று ஹாஜிக்கள் வழங்கும் தலாக் உத்தரவுகளுக்கு சட்ட அந்தஸ்த்து கிடையாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இதுகுறித்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.