பாலைப்பழம் பற்றி ஒரு அறிமுகம். தெரியாதவர்களுக்கு...பாலை (Manilkara hexandra) என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாக இருப்பதோடு 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீற்றர் ஆகும்.

மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும். இம்மரப்பலகையை Ceylon Iron Wood என்றும் அழைப்பர் இது வைகாசி மாதங்களில் மஞ்சள் நிறத்தில் வேப்பம்பழத்தை ஒத்த மிகவும் இனிமையான சிறந்த வாசனையுள்ள பழங்களைத்தரும், ஆகையால் இப்பழம் ஆண்டுக்கு ஒரு முறையே காய்க்கின்றது.

இப்பாலை மரங்கள்  அதிகம் உஷ்ணம் கூடிய உலர் வலயப் பிரதேசங்களிலே தான் வளர்கின்றன. குறிப்பாக சில மாவட்டங்களில் ஆங்காங்கே காடுகளை அண்மித்த வீதிகளின் இருமருங்கிலும் இம்மரங்கள் குறித்த பருவத்தை அடைந்ததும் பழங்களால் அழகாக காட்சியளிப்பதை நன்றாக அவதானிக்கமுடியும்.

இப்பழங்களை பறிப்பதற்கென்று சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக சென்று பழங்களை பறித்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து சந்தோசமாக உண்பதை காண முடியும். அத்தோடு இப்பழங்கள் சந்தைகளிலும் அக்காலப்பகுதியில் விற்பனைக்கு வருவதானது காடுகளுக்கு சென்று பறிக்க இயழாமல் இருப்பவருக்கு கொள்வனவு செய்ய மிகவும் இலகுவாக அமைந்துவிடுவது குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும்.

இன்று ஒரு சிலரைத் தவிர்த்து அதிகமானோருக்கு இவ்வாறான பழ வகை ஒன்று உண்டா என்று தெரியாதளவு ஏனைய பழ வகைகள் மக்களிடம் இடம்பிடித்திருத்திருக்கின்றன; ஆதலால் இப்பழம் பற்றிய அறிமுகம் குறைந்து காணப்படுகின்றது.  காடழிப்பின் காரணமாகவும் குறிப்பிட்ட பருவ காலத்திற்கு மாத்திரம் காய்க்கும் பழம் என்பதால் மக்கள் இது பற்றிய அதிகம் அக்கறை கொள்ளாமையாலும் இப்பழம் தற்காலத்தில் அரிதாகி குறைந்து வருகின்றது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.