முத்துப்பேட்டை அருகே காஜா அலாவுதீன்.என்ற வாலிபருக்கு கொலை மிரட்டல்முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா பகுதியை சேர்ந்தவர் காஜா அலாவுதீன். இவருடைய மகன் முகமது ஜூபையர் (வயது 22). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதிராம்பட்டினம் சாலியா தெருவை சேர்ந்த சேக்தாவூது மகன் சுலைமான் (22) என்பவர் முன்விரோதம் காரணமாக முகமது ஜூபையரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முகமது ஜூபையர் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை தேடி வருகிறார்கள்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.