இலங்கை முஸ்லிம்களுக்கான தெளிவான செய்தி ..சுமார் 57 வருடங்களுக்கு முன் 1961ல் மௌலானா அப்துல் ஹஸன் நத்வி மியன்மாரில் நிகழ்த்திய ஒரு உரையில் ரோஹிங்யா முஸ்லிம்களைப் பார்த்து நீங்கள் இறைவனின் பாதைக்கு திரும்பி விடுங்கள் இல்லையேல் முன்னொரு போதும் இல்லாத விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை பெரும்பாலும் பலித்துள்ளதாகவே இப்போது எண்ணத் தோன்றுகின்றது. ரோஹிங்யா முஸ்லிம்கள் இன்று ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்படுகின்றனர். ஆண், பெண், சிறுவர், முதியோர் என வயது மற்றும் பால் பேதம் இன்றி மக்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். கொன்று குவிக்கப்படுகின்றனர். முஸ்லிம் நாடுகள் உட்பட முழு உலகும் இந்தக் கொடுமைகளை இன்னமும் கண்டும் காணாமல் உள்ளன.

இலங்கையில் பாஸிஸ சக்திகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், மியன்மாரின் கசாப்புக் கடைக்காரன் விராத்து தேரரின் ஒத்துழைப்போடு இந்த சக்திகள் செயற்பட்டு வருகின்ற நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு மியன்மார் நிலை ஒரு தெளிவான செய்தியாகவே உள்ளது. மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் பொது பல சேனா அமைப்பு விராத்து தேரருடன் பேணிய உறவு அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் என்பன இங்கே நினைவூட்டத்தக்கவை.

மியன்மார் முஸ்லிம்கள் மீதான அண்மைக்கால தாக்குதல் 2016 அக்டோபரில் தொடங்கியது. ஏற்கனவே அங்கே வறுமையால் வாடும் முஸ்லிம்கள் மீது கற்பழிப்பு, கொலை, தீ வைத்தல், இருப்பிடங்களை நாசப்படுத்தியமை என குற்றச் செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. காம வெறி கொண்ட காடையர்களாலும் இராணுவத்தாலும் பெண்கள் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்டுள்ளனர். 

தமது காமப் பசியை தீர்த்து கொண்ட பின் இந்தப் பெண்களின் இரண்டு மூன்று வயது குழந்தைகளோடு சேர்த்து கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம்கள் கொத்து கொத்தாக் கொல்லப்படுவது அங்கு வழமையான ஒன்றாகிவிட்டது. இராணுவம் ஹெலிகொப்டர்களைப் பாவித்து தப்பிச் செல்லும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து வருகின்றது. இவை அனைத்துமே தக்க ஆவணங்கஷளோடு பதிவாகியுள்ளன.

சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற மியன்மாரின் ஆட்சியாளர் ஆங் சூங் சூகி ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இன்னமும் காணப்படுகின்றது.
ஆங் சாங் சூகி தலைமையில் இந்த அநியாயத்துக்கு முடிவு கட்டப்படும் என்று முழு உலகமுமு; எதிர்ப்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. ஒரு காலத்தில் மியன்மார் முஸ்லிம்கள் சகல உரிமைகளும் கொண்ட சம பிரஜைகளாகவே காணப்பட்டனர். பேரினவாத இராணுவம் தான் அவர்களின் உரிமைகளை உடைத்;தெறிந்தது. டைம் சஞ்சிகையால் பௌத்த பயங்கரவாதத்தின் முகம் என வர்ணிக்கப்பட்ட விராத்து தேரரின் கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாக மியன்மார் இராணுவம் தான் வழிவகுத்தது.
மியன்மாரில் முஸ்லிம்களை இன ரீதியாக அழித்து ஒழிப்பதுதான் அவர்களின் இறுதி இலக்கு. இதை பங்களாதேஷின் தென் பகுதியில் உள்ள ஐ.நா அகதிகள் முகவராண்மையின் பிரதானியே குறிப்பிட்டுள்ளார். 

இந்த வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட பின் சூகி அந்தப் பகுதிக்கு விஜயம் செய்யக் கூட இல்லை. அவர் தனது கையாளாகாத நிலையையே வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டும் அன்றி சூகி இந்தக் கொலைகாரர்களுக்கும் காமுகர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்தப் பிரதேசத்தில் இடம்பெறும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக அவர்கள் போராடுவதாக சூகி புதிய அறிவிப்பை விடுத்துள்ளார். 

மனித உரிமை மீறப்படாத ஒரு நாடு இருந்தால் அதை எனக்கு காட்ட முடியுமா என்ற கேள்வியையும் சூகி முன்வைத்துள்ளார். இதன் மூலம் மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை அவர் நியாயப்படுத்தி உள்ளார்.

ஆங் சாங் சூகி தனது மன சாட்சியை திறந்து மியன்மார் மக்களோடு நேரடியாகப் பேச வேண்டும் என ஐ.நா செயலாளரின் விஷேட ஆலோசகர் விஜய் நம்பியார் கேட்டுள்ளார். 

மியன்மாரில் உள்ள எல்லா சமூகத்தவர்களும் இந்த வன்முறைகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டும. குற்றப் பின்னணி கொண்ட ஒரு சிறிய குழு ஒரு பிராந்தியம் முழுவதும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சூகி தலைமையிலான அரசு இந்த விடயங்களை கண்டும் காணாமல் இருப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் றாத் அல் ஹுஸேன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பிராந்தியத்தில் நீண்ட கால அடிப்படையில் மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கொலைகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பற்றி தினசரி தனது அலுவலகத்துக்கு முறைப்பாடுகள் வந்த வண்ணம் உள்ளதாகவும் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இங்கு எதுவுமே நடக்கவில்லை என்று மியன்மார் அதிகாரிகள் கூறுவது உண்மையாயின் அவர்கள் ஏன் எமது அதிகாரிகள் அங்கு விஜயம் செய்ய அனுமதி வழங்க மறுக்கின்றார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

எமக்கு அனுமதி அளிக்க தொடர்ந்தும் மறுப்பதால் அங்கு ஏதோ மோசமான சம்பவங்கள் இடம்பெறுவதாகவே நாம் கருத வேண்டியுள்ளது என்பதே அவரின் கருத்தாகும்.
ரோஹிங்யாக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள். 2012இல் இந்த இன வன்முறைகள் தொடங்கப்பட்டது முதல் 120000 த்துக்கும் அதிகமான ரோஹிங்யா மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த விதமான வசதிகளும் அற்ற முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மியன்மார் முஸ்லிம்கள் ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்தனர். அவர்களில் பலர் செல்வாக்கு மிக்கவர்களாகவும் காணப்பட்டனர். அவர்களுக்கு தொழில், வர்த்தகம், பாரிய தொழிற்சாலைகள் என பல செல்வங்கள் இருந்தன. எல்லைக் கட்டுப்பாடுகள் அற்ற அன்றைய கால பர்மா முஸ்லிம்கள் மிகச் சிறந்த வெளித் தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.

பல பர்மா முஸ்லிம்கள் ஆடம்பர பங்களாக்களில் வாழ்ந்தனர். ஆனால் அவற்றில் இருந்து வெளியேற ஒரு சில மணி நேரம் காலக்கெடு வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளில் இருந்து திடீர் என வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட பலர் இன்னும் நடு வீதிகளில் தான் உள்ளனர். ஒரு காலத்தில் ஏனைய முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிம்களைப் போலவே செல்வத்தோடு வாழ்ந்தவர்கள் தான் பர்மா முஸ்லிம்கள். இன்று அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

1962ல் பர்மாவில் ஒரு இராணுவ சதிப் புரட்சி இடம்பெற்றது. அந்த புரட்சியோடு இரவோடு இரவாக பர்மா முஸ்லிம்களின் நிலைமை தலைகீழாக மாறிப் போனது. அன்று முதல் மோசமடையத் தொடங்கிய அவர்களின் நிலை தான் இன்று இந்தளவு மோசமான கட்;டத்தை அடைந்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான பொதுவான போக்குடைய பக்கச்சார்பான சில ஊடகங்கள் கூட இன்று உலகில் மிகவும் அடக்குமுறைக்கு ஆளான ஒரு சமூகம் என அவர்களைக் குறிப்பிடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.m
பர்மாவில் உள்ள முஸ்லிம்கள் என்ன செய்தார்கள்? அல்லது என்ன செய்யத் தவறினார்கள்? 1962ல் ஏன் அவர்களின் தலையெழுத்து இரவோடு இரவாக மாறியது. தேசங்களின் தலைவிதிகளை மாற்றுபவன் இறைவன் ஒருவனே. 

அடக்குமுறையாளர்களும் அவனது சேனையின் ஒரு பகுதியே. இந்த அடக்குமுறையாளர்கள் தான் சமூகங்களின் தலையெழுத்தை மாற்றி அமைக்கின்றனர். எனவே இந்த தலையெழுத்து மாற உண்மையான காரணம் இறைவனே. தமது நிலைமைகளில் மாற்றம் காண வேண்டுமானால் மியன்மார் முஸ்லிம்களும் ஏனைய நாடுகளின் முஸ்லிம்களும் செய்ய வேண்டியது என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில் இவ்வாறு தரப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் நத்வி அவர்கள் ஏற்கனவே பர்மா மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையில் இறைவனுக்கு பொறுத்தமான சரியான வாழ்க்கையை இந்த நாட்டில் நீங்கள் வாழாவிட்டால் இந்த நாட்டில் நீங்கள் வாழவே முடியாத ஒரு காலம் வரும் என்று குறிப்பிட்டுள்ளார். 

அவர் அந்த எச்சரிக்கையில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது:

தார்மீக ஒழுக்கங்களுடன் கூடிய வாழ்ககை முறையை நீங்கள் வாழ முயற்சிக்காவிட்டால் உங்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை என்பன கூட ஆபத்தை எதிர்நோக்கும். எந்த ஒரு நாடாயினும் சரி முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் அவர்கள் இறைவனுக்கு பொறுத்தமான ஒழுக்க நெறிகள் மிக்க வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் தாம் பின்பற்றும் அந்த வாழ்க்கை முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது எல்லாம் வல்ல இறைவன் இந்த சமூகத்தின் பாதுகாப்பை தானே பொறுப்பேற்றுக் கொள்வான்.

மார்க்கத்தைப் பற்றிய புரிந்துணர்வை இறைவன் உங்களுக்கு வழங்கி இருந்தால் அந்த வாழ்க்கை முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும். இல்லையேல் வாழ்வதே கஷ்டமாகி விடும். எனது இந்த உரை உங்கள் நினைவுகளில் இருக்குமா இருக்காதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இன்று இங்குள்ளவர்களில் யாராவது ஆபத்து எற்படும் காலத்தில் உயிருடன் இருந்தால் இந்த உரை உங்கள் நினைவுக்கு வரும். நான் எதிர்காலத்தை அறிவிப்புச் செய்பவன் அல்ல. பத்து ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கருமேகம் சூழ்ந்து காற்றும் வீசும் போது மழை வரப் போகின்றது என்பதை கணிப்பது கஷ்டமான விடயம் அல்ல. அவ்வாறு மழை பெய்யும் போது இந்தக் கணிப்பைக் கூறியவரை யாரும் புனிதராகப் பார்ப்பதில்லை. காரணம் அது அவர் தெளிவான சான்றுகளின் அடிப்படையில் தனது அறிவை கொண்டு கூறிய விடயம். அந்த அடிப்படையில் தான் நானும் கூறுகின்றேன் கஷ்டமான ஒரு காலத்துக்கு நிங்கள் முகம் கொடக்க வேண்டியிருக்கும். இறைவன் பெயரால் நிங்கள் உங்கள் உலக விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என கேட்டக் கொள்கிறேன்.இறைவனின் பக்கம் கவனத்தை திருப்புங்கள். இறை சிந்தனையின் அடிப்படையில் இறை தத்துவத்தின் அடிப்படையில் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று ஹஸ்ரத் நத்வி அன்றே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் பர்மா முஸ்லிம்கள் இந்தப் போதனைகளுக்கு செவி சாய்க்கவில்லை. இன்று வரை இந்தப் போதனையில் பொதிந்துள்ள உண்மையின் பக்கம் அவர்கள் தம் கவனத்தை செலுத்தவில்லை. அவர்கள் அன்று செவிசாய்க்கத் தவறியதால் தான் இன்றைய நிலைக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் அப்படியே இருந்தால் நிலைமை இதை விட மோசம் அடையலாம். மியன்மார் முஸ்லிம்களின் இன்றைய நிலை இலங்கை முஸ்லிம்களுக்கும் நிச்சயம் ஒரு பாடமாகும்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.