மாணவர்களின் ஒற்றுமையை இழிவுபடுத்திய காவி தீவிரவாதிகள்...மாணவர்களின் ஒ
ற்றுமையை சிதைக்கும் வண்ணமும், இழிவு படுத்தும் வண்ணமும் பேசிய இவர்கள் மூன்று பேர் மீதும் நடவடிக்கை வேண்டும் - வலுக்கும் கோரிக்கை

தமிழர் ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் ஹெச்.ராஜா, தமிழ் இளைஞர்களை இழிவுபடுத்தும் சு.சாமி, ராதாராஜன் ஆகியோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது

"மாட்டை அறுத்து சாப்பிடும் முஸ்லிம்களும், தலித்துகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது” என்று பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

பண்பாட்டு உரிமை மீட்கப் போராடி வரும் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களை ‘பொறுக்கிகள்’ என்று பாஜக எம்.பி. சு.சாமி குறிப்பிட்டு வருகிறார்.

“இலவச உடலுறவு’ என்று அறிவித்தாலும் இவ்வளவு இளைஞர்கள் கூடுவார்கள்” என்று எண்ணிப் பார்க்க முடியாத ஆபாச தொனியில் பீட்டா ஆதரவாளரும், ஆர்எஸ்எஸ் பிரமுகருமான ராதாராஜன் பேசியுள்ளார்.

இவ்வாறு பேசிய இவர்கள் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.