ஆஸ்திரேலியாவில் அரிய வகை உயிரினம் கண்டுபிடிப்பு !
பிற கண்டங்களிலிருந்து ஆஸ்திரேலியா கண்டம் பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கியது, வேறு எங்கும் காண இயலாத கங்காரு, முட்டையிட்டு குஞ்சு பொரித்து பால் கொடுக்கும் பிளாட்டிபஸ் (Platipus) போன்ற பல அரிய வகை மிருகங்களை கொண்டது.

வினோதங்கள் நிறைந்த இந்த ஆஸ்திரேலியா மண்ணிலிருந்து பார்ப்பதற்கு தவளை குஞ்சும் இராலும் சேர்ந்தாற் போல் தோற்றமுடைய ஒரு உயிரினம் ஒன்று வறண்ட நிலப்பகுதியில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட மண் அரிப்பிற்குப் பின் வெளியாகியுள்ளது. இதற்கு கேடய இரால் (Shield Shrimp) என பெயரிட்டுள்ளனர் என்றாலும் இவை இரால் இனத்தை சேர்ந்ததல்ல. இவை சுமார் 9 செ.மீ நீளம் வளரக்கூடியவை.

இந்த வகை உயிரினம் கணக்கிடப்படாத பல ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்தவை என்றும், இந்த உயிரினத்தின் முட்டைகள் கணக்கிடப்படாத பல ஆண்டுகளுக்கு கெடாமல் வறண்ட களிமண்ணுக்குள் இருக்கும் தன்மையுள்ளவை என்றும், மழைநீர் வடிவதற்குள் இவை மீண்டும் இனப்பெருக்கத்திற்காக முட்டைகளையிட்டு அடுத்த தலைமுறையினம் வெளியாவதற்காக கடும் களிமண்ணுக்குள்ளேயே பாதுகாத்து வைத்துவிட்டு அழிந்து போகும் எனவும் வடபகுதி பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகளுக்கான ஆணையம் (Northern Territory Parks and Wildlife) தெரிவித்துள்ளது.

Source: The Telegraph / Msn


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.