நோயினால் பாதிக்கப்பட்ட பெண்னை ட்விட்டர் மூலம் தகவலறிந்து சந்தித்த துருக்கிய அதிபர் எர்துகான்.22 வயதுடைய மூளை சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை துருக்கி நாட்டு ஜனாதிபதி எர்துகான் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார்.

துருக்கியின் வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த கொசெலி எனும் நகரைச் சேர்ந்த குல்சாஹ் யகுமுர் யஸீஸி எனும் 22 வயதுடைய இளம் பெண் மூளை சம்பத்தப்பட்ட ஒரு நோயினால் பாதிக்கப்பட்டவராவார். அந்த இளம் பெண் ஜனாதிபதி எர்துகானின் படத்தினை வரைந்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதியை மென்சன் பண்ணி “இது ஓர் வலதுகுறைந்த பெண்ணின் படைப்பு, எனது அன்புக்குரிய ஜனாதிபதி பார்ப்பார் என நினைக்கிறேன்” என எழுதி இருந்தார். இதனைப் பார்வை இட்ட ஜனாதிபதி எர்துகான் தனது பதிலை பின்வருமாறு எழுதி இருந்தார்.

“மிகவும் நன்றி குல்ஸாஹ், உங்களது முயற்சியை பாராட்டுகிறேன். அத்தோடு என்னுடைய மகள்களில் ஒருவராகவும் இந்த ஜனாதிபதி மாளிகையில் ஓர் அழகான இதயமாகவும் பார்க்கிறேன்”

பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு குல்சாஹ்வும் அவரது தாயும் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். அத்தோடு பரிசாக ஒரு மடிக்கணினி ஒன்றை வழங்கினார் ஜனாதிபதி எர்துகான். குல்ஸாஹ்வின் தாயார் கூறினார், தனது மகள் ஜனாதிபதியை மிகவும் நேசிக்கிறார் அத்தோடு தான் 5 வயதிலிருந்து நடக்க முடியாத மகள் அதிகமான சிகிச்சையின் பின்னர் தனது 12 வயதிலிருந்து பாடசாலை செல்கிறார். தான் ஜனதிபதியோடு பேசியது மிகவும் சந்தோஷமான ஒன்றாக கருதுகிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.