முஸ்லிம் சிறுவன், பெளத்த மடாலயத்தில் துறவியாக போவதற்கு காரணம் யார் ?முஸ்லிம் சிறுவன், தந்தையால் பெளத்த மடாலயத்தில் துறவியாக போவதற்கு காரணம் யார் ?

ஒரு சில இஸ்லாமிய சகோதரர்கள்  அந்த சிறுவனின் தந்தைக்கு  கெட்ட வார்த்தைகளால்  ஏசுகின்றனர் பிழை என்றாலும்  உண்மையில் யாராக இவ்வாறுதான் ஏச தோன்றும் எதற்கு காரணம் யார் என்று நாம் முதலில் உணரவேண்டும்

 என் கொள்கை சரியா உன் கொள்கை சரியா என மேடை போட்டு மாநாடுகள் நடாத்தும்  ஒரு சில  உலமாக்களுக்கும் இந்த செய்தி  சமர்ப்பணம்.

இன்று இஸ்லாமிய  சொற்பொழிவுகள் கேட்க சென்றால் ( சில விதி விலக்குகள் உண்டு ) பல இடங்களில்  நடப்பது இயக்க ரீதியான விமர்சனங்களே அன்றி மார்க்க ரீதியான வழிகாட்டல்கள் இல்லை.

மார்க்கத்தை வழிகாட்ட வேண்டியவர்கள்   ஆயிரம் கொள்கை பிரச்சினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

 மார்க்கத்தை கற்றவார்களிடமே  ஒற்றுமை  இல்லாத போது பாமர மக்களிடம் எவ்வாறு அவர்கள்  ஒற்றுமையையும் ,நல்ல குணங்களையும்  எதிர்பார்ப்பது புரிந்து கொண்டு செயற்படுங்கள்

இஸ்லாம்  காட்டி தந்த அழகிய  வாழ்க்கை வழி முறை , அல்லாஹ்வின் தூதர் அண்ணல் முஹம்மத் (ஸல்) அவர்களால் வாழ்ந்து காட்டப்பட்ட அழகிய முன்மாதிரிகள் ,குழந்தை வளர்ப்பு  போன்ற விடயங்களை அதிகம் அதிகமாக தெளிவு படுத்துங்கள் இஸ்லாமிய முறையில் குழந்தை வளர்ப்பு எப்படி ? அதனால் கிடைக்கும் நன்மை என்ன ? குழந்தை வளர்ப்புக்காக தாய் ,தந்தைக்கு  மறுமையில் எவ்வாறு கூலிகள் கிடைக்கவுள்ளன என்பதை   தாய் ,தந்தைகளுக்கு உலமாக்கள் பயான் நிகழ்வுகளில்  சொல்லிக் கொடுப்பதனால் இவ்வாறான சம்பவங்கள்   பெரும்பாளும் நடைபெறமால் தடுக்கலாம்

உதாரணமாக பல விடயங்களை எடுத்து காட்டலாம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்த்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்த்து கிடைத்தது.) என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மத் (10202)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (3358)

கொள்கை விடயங்களில் மாத்திரம் தமக்குள் அடித்து கொள்ளாமல்   தற்காலத்துக்கு பொருத்தமான நல்ல சொற்பொழிவுகள் மக்களுக்கு சென்றடையும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து எமது சமூகத்தை அல்லாஹ்வின் உதவியால் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

கட்டுரை By:  சபா ரௌஸ் கரீம்
கல்முனை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.