அதிரை அருகே சாலை விபத்து! மூவர் படுகாயம்!!அதிரை அருகே உள்ள கருக்குளத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி,இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேற்று (11-01-2017) இரவு அதிரைக்கு வந்து விட்டு கருங்குளத்தை நோக்கி சென்று உள்ளார் . அப்போது கருங்குளம் அருகில் சென்ற போது மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார் .இதில் சுந்தரமூர்த்தி மற்றும் குழந்தைக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது ஆனால் அவருடைய மனைவி ரேவதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது .உடனடியாக அக்கம்பக்கத்தினர் கார் மூலம் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .

தற்போது ரேவதி அவர்களை மேல்சிகிச்சைக்காக அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து சென்று உள்ளனர் . இந்த விபத்தால் கருங்குளம் பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது .மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி மற்றும் உதவிகளை CBD மாவட்ட துணை தலைவர் கலீஃபா உடன் இருந்து செய்தார்..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.