தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து (RDO) அலுவலகங்களில் கட்டணம் உயர்வுஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றுக்கான கட்டணமும் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் 350 ரூபாயில் இருந்து 650 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.வாகனங்களுக்குகான தகுதிச்சானற் கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி 550 ரூபாயாக இருந்த வாகன தகுதிச்சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணம் தற்போது 1,050 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தவணை கொள்முதல் ரத்து சான்றிதழுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய கட்டணம் குறித்த விவரங்கள் கம்ப்யூட்டர்களில் மாற்றப்படததால் அலுவலர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.