பௌத்த விகாரையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் (SLTJ) இரத்ததான முகாம் .ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தர்காநகர் கிளை நடத்திய இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றைய தினம் (01.01.2017) தர்காநகர், அபகஹந்திய பௌத்த விகாரையில் சிறப்பாக நடைபெற்றது.

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை நாடு முழுவதும் செய்து வரும் தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் ஒன்றாக இரத்ததான முகாம்களையும் நடத்தி வருகிறது.

முஸ்லிம்கள் தீவிரவாதிகள், இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் அமைதி மார்க்கம் என்பதை பிரச்சாரத்தினூடாக மாற்று மத மக்கள் மத்தியில் கொண்டு செல்வதைப் போல், இரத்ததானத்தின் மூலமும் கொண்டு சென்று சேர்க்கும் பணியை செய்கிறது தவ்ஹீத் ஜமாஅத்.

அந்த வகையில் கடந்த 01.01.2017 அன்று தர்காநகர், அபகஹந்திய பௌத்த விகாரையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தர்கா நகர் கிளை நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.