அதிரையில் TNTJ கிளை-2 நடத்திய தெருமுனைப்பிரசாராக் கூட்டம் !



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அதிரையில் எதிர்வரும் ஏப்ரல் ( 09-04-2017 ) அன்று 'முகமதுர் ரசுலுல்லாஹ்' மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி TNTJ அதிரை கிளை-2 ஏற்பாட்டின் பேரில் மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கி கூறுவதற்காக தெருமுனைப் பிரசாரக்கூட்டம் தக்வா பள்ளிவாசல் அருகில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் அதிரை கிளை-2 தலைவர் பஜால் முகமது தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி 'மத்ஹபை பின்பற்றாத மத்ஹப் வாதிகள்' என்ற தலைப்பிலும், மெளலவி அபூபக்கர் சஅதி 'முகம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு ஏன்?' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.