தாவூத் இப்ராஹீம் சொத்துக்களை UAE அரசு முடக்கிய செய்தி உண்மையானதா?இந்தியாவில் இருந்து தப்பியோடிய, தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹீமின் சொத்துக்களை ஐக்கிய அரபு அமீரகம் முடக்கி வைத்துள்ளதாக கூறப்பட்ட செய்திகள் உண்மையற்றவை என்று அதிகாரப்பூர்வ வட்டராங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த புதன் கிழமை மாலை பா.ஜ.க. தனது ட்விட்டர் பக்கத்தில்,  மோடி அரசின் இடைவிடாத முயற்ச்சியினால் ₹15,000 கோடி மதிப்பிலான தாவூத் இப்ராஹீமின் சொத்துக்களை ஐக்கிய அரபு அமீரகம் முடக்கியுள்ளது என்று வெளியிட்டிருந்தது.

அதில், “பிரதமர் மோடியின் மிகப்பெரிய இராஜதந்திர வெற்றி. இந்தியாவின் மிகப்பெரிய தேடப்படும் குற்றவாளிகளுள் ஒருவனான தாவூத் இப்ராஹீமின் ₹15000 கோடிகள் மதிப்பிலான சொத்துகள் UAE வில் முடக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் கருத்துப்படி UAE வின் இந்த நடவடிக்கை, மோடியின் அமீரக பயணத்தின் போது இது குறித்து மோடி விவாதித்ததாகவும் அந்நாட்டு அரசை இது குறித்து விசாரணை நடத்த கேட்டுக்கொண்டதாகவும் அதன் விளைவே இந்த நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்த அரசு தரப்பு செய்திகள் இது உண்மையல்ல என்று தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான அமீரக தூதரும் இது குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதுவரை இந்த சொத்து முடக்கத்தை பற்றிய செய்தி வெளியிட்டுள்ள செய்தி நிறுவனங்கள் அனைத்தும் பெயர் குறிப்பிடாத அறிக்கைகளையோ அல்லது பா.ஜ.க. வின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான செய்தியையோ மட்டுமே குறிபிட்டுள்ளன.

கடந்த செவ்வாய்கிழமை இது குறித்து முதலில் செய்தி வெளியிட்டவை ZEE NEWS செய்தி நிறுவனம் மற்றும் ABP செய்தி நிறுவனம் தான். இவர்களின் இந்த செய்திக்கு ஒரு நாளைக்குப் பின்னர் பா.ஜ.க. தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டது. ஆனால் இவர்கள் தங்களது இந்த செய்திக்கு ஆதாரமாக வெறும் “அறிக்கைகள் தெரிவிக்கின்றன” என்று மட்டுமே கூறியுள்ளனர். இதனை பின்தொடர்ந்து மற்ற செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிடத்தொடங்கிவிட்டன. சில செய்தி நிறுவனங்கள் மட்டுமே இது குறித்த உண்மை நிலையையும் இந்த நடவடிக்கை குறித்து அரசிற்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

- புதிய விடியல் -
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.