முத்துப்பேட்டை -1 திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 14 டாஸ்மாக் கடைகள் மூடல்திருவாரூர் மாவட்டத்தில் 14 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை அடையப்படுமென்று 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தெரிவித்தது. இதையடுத்து மீண்டும் அதிமுக அரசு அமைந்த நிலையில் அறிவிப்பின்படி முதல்கட்டமாக கடந்தாண்டு மே மாதம் 500 மதுக்கடைகளை மூடியும், கடை திறந்திருக்கும் நேரத்தை குறைத்தும் நடவடிக்கையை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்தார். அந்த வகையில் கடந்த 20ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூட உத்தரவிட்டார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் தஞ்சை சாலை, திருத்துறைப்பூண்டியில் திருவாரூர் சாலை மற்றும் முத்துப்பேட்டை, வலங்கைமான், பேரளம், விளமல், காட்டூர், கீரன்குடி, தேவர்கண்டநல்லூர், களப்பால், பூந்தோட்டம், தேவன்குடி, மகாதேவப்பட்டினம், விக்கிரபாண்டியம் ஆகிய இடங்களிலிருந்து செயல்பட்டு வந்த 14 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் இருந்த 148 மதுக்கடைகளில் முதல்கட்ட நடவடிக்கையில் 7 கடைகளும், தற்போது 2ம் கட்டமாக 14 மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.