அபுதாபியில் 1 நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்த நபருக்கு சிறை !அமீரகத்தில் பேன்ஸி எண்களாக கருதப்படும் வாகனப்பதிவு எண்களை (Vehicle Registration Nos.) துபை, அபுதாபி, ஷார்ஜா போன்ற எமிரேட்டுகளில் தனித்தனியாக பகிரங்க ஏலம் விட்டு அந்தந்த எமிரேட்டுகளைச் சேர்ந்த போக்குவரத்து துறையினர் நிதி திரட்டுகின்றனர்.

அதனடிப்படையில், கடந்த 2016 நவம்பர் 19 ஆம் தேதி அபுதாபியில் பல பேன்ஸி (Fancy) பதிவு எண்களுடன் 1 என்ற எண்ணும் பகிரங்க ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் அரபு நாட்டைச் சார்ந்த ஒருவர் 31 மில்லியன் திர்ஹத்திற்கு ஏலம் எடுத்ததுடன் அதற்கான தொகையை காசோலையாகவும் (Cheque) கொடுத்தார்.

அப்புறமென்ன? தன்னுடைய வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லாத நிலையில் காசோலையை கொடுத்ததுடன், ஏலம் எடுத்த எண்ணை இன்னும் கூடுதல் விலைக்கு பிறரிடம் விற்றுவிட்டு காசோலைக்கான பணத்தை செலுத்தவும், மீதமாகும் பணத்தை செலவுக்கு வைத்துக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தார் ஆனால் அவர் திட்டமிட்டபடி நம்பர் பிளேட்டை விற்கமும் முடியாமல், காசோலைக்கு தேவையான பணத்தை திரட்ட முடியாமல் போனதால் அவரது 'பலே திட்டம்' பணலாகி போனதால் தற்போது கைது செய்யப்பட்டு வழக்கை சந்தித்து வருகிறார்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.