படகு விபத்து ! 10 சடலங்கள் மீட்பு ..பேருவலையில் இருந்து இன்று (19) காலை கடலுக்கு சென்ற படகு தொடரில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியுள்ளதாகவும் மேலும் சிலரை காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டு நாகொடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் பயணம் செய்தவர்கள் கட்டுகுருந்த தேவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தவர்கள் எனவும், அவர்களின் படகு கட்டுகுருந்த பகுதியிலேயே கவிழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த படகில் 16 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களை தேடும் பொருட்டு மேலும் சில படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பாதிப்பின்றி மீட்கப்பட்டவர்கள் பேருவளை மற்றும் நாகொடை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.