முத்துப்பேட்டை 13வது வார்டில் ஓராண்டாக எரியாமல் உள்ள சோலார் மின்விளக்குமுத்துப்பேட்டை 13வது வார்டில் கடந்த ஓராண்டாக எரியாமல் உள்ள சோலார் மின்விளக்கு எரிவதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை 13வது வார்டு திமிலத்தெரு மற்றும் அரசர்குளம் சந்திக்கும் பகுதியில் உள்ள மகளிர் சுகாதார நிலையத்திற்கு வசதியாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் 1.50 லட்சம் செலவில் பூங்கொல்லை சந்திப்பு, மகளிர் சுகாதாரம் அருகில், அரசர்குளம் சந்திப்பு பகுதி உட்பட மூன்று இடங்களில் சோலார் மின் விளக்கு அமைக்கப்பட்டது. முறையாக பராமரிக்க படாததால் கடந்து ஒரு ஆண்டுக்கு முன் 3 சோலார் விளக்குகளும் பழுதடைந்து விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் பெண்கள் அப்பகுதியில் செல்வதற்கு  அச்சம் அடைகின்றனர். இதனையடுத்து பழுதடைந்த சோலார் மின் விளக்கு நிலைமையை  குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதனை சரி செய்ய முன்வரவில்லை. 3 சோலார் விளக்குகளும் எரிவதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.