மெரினாவில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் வட மாநில இளைஞர் கொலை : சென்னை யில் பரபரப்புசென்னை மெரினாவில் 144 தடை போடப்பட்டுள்ள நிலையில் வட மாநில இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை குறித்து மெரினா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி கடந்த மாதம் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது சென்னையில் பயங்கர கலவரம் வெடித்தது.

கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மாணவர்கள் தரப்பில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அதேபோல் போலீசார் தரப்பிலும் கிட்டத்தட்ட 90 பேர் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து வருகிற பிப்ரவரி 12ம் தேதி வரை மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் நாளில் மெரினா கடற்கரையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அது படிப்படியாக குறைக்கப்பட்டு ஷிஃப்டு முறையில் 140 போலீசார் விதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னன மெரினா கடற்கரைக்கு அருகே உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அலுவலகத்துக்கு எதிரே இன்று காலை 7.15 மணி அளவில் வட மாநில இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய மெரினா போலீசார் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவரின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.