உலகின் நீண்டதூர கத்தார் விமானம் 14,535 கி.மீ பயணம் செய்து சாதனை !தற்போது சேவையிலுள்ள விமான தடங்களிலேயே உலகின் மிக நீண்டதூர இடைநில்லா பயணமாக கத்தார் - ஆக்லாந்து இடையே நேற்று QR920 என்ற எண்ணுள்ள கத்தார் ஏர்வேஸ் விமானம் 16.23 மணிநேரத்தில் நிகழ்த்திய புதிய சாதனை பயணமாக விளங்குகிறது, திட்டமிட்ட பயண நேரத்திற்கு 5 நிமிடத்திற்கு முன்பாகவே விமானம் தரையிறங்கியது.

போயிங்  777-200LR ரக விமானத்தின் இந்த சாதனைப் பயணத்தில் 4 விமானிகளும் 15 விமான சிப்பந்திகளும் பணியிலிருந்தனர். மேலும், 1,100 கப் தேநீர் மற்றும் காபிகள், 2000 குளிர்பானங்களும், 1,036 உணவுத்தட்டுகளும் பயணிகளுக்கு பரிமாறப்பட்டுள்ளன. இந்த விமானம் தனது பயணத்தின் போது 10 சர்வதேச நேர மண்டலங்களை (Time Zones) கடந்து சென்றுள்ளது.

ஆக்லாந்து நேரப்படி இன்று காலை 7.25 மணியளவில் (அமீரக நேரம் நேற்றிரவு 10.25 மணிக்கு) தரையிறங்கிய விமானத்திற்கு உலக நடைமுறைப்படி தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. கடந்த 2016 மார்ச் மாதம் எமிரேட்ஸ் விமானம் துபையிலிருந்து ஆக்லாந்திற்கு 14,200 கி.மீ பறந்து சென்றிருந்ததே இவ்விமான தடத்தின் முந்தைய அதிகபட்ச தூரமாகும்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.