துபாய் அரச குடும்பத்தின் பெருந்தன்மை! 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழியரின் இறுதி நிகழ்ச்சிக்காக இந்தியா வந்தனர்!



அரபு நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை.

சிலருக்கு சுகபோக வாழ்க்கை கிடைத்தாலும், சிலருக்கு கசப்பான அனுபவங்களும் ஏற்படும்.

இந்நிலையில் துபாய் அரசு குடும்பத்தினர் ஊழியர்கள் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தனர் என்பதை ஒரு சம்பவம் உணர்த்தியுள்ளது.

 கேரள மாநிலம் மலப்புரம்  பகுதியைச் சேர்ந்தவர் தையில் முகைதீன் குட்டி.

 இவர்  ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது ரஷீத் அல் மக்துமிடம் பணி புரிந்து வந்தார்.

பிரதமரின் ஷா அபீல் அரண்மனையில் போக்குவரத்துப் பிரிவில்தான் முகைதீன் குட்டிக்குப் பணி.

வேலையில் துடிப்பாக இருந்த மொய்தீன் குட்டி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே  அந்த வேலையில் இருந்து விலகி கேரளா திரும்பினார்.

ஆனாலும் அவருடைய பணியால் ஈர்க்கப்பட்ட அரச குடும்பத்தினர் அவரை மறக்கவில்லை.

இந்நிலையில் முகைதீன் குட்டி இறந்துவிட்டதாக அரண்மனைக்கு செய்தி வந்தது. இதனையடுத்து அரச குடும்பத்தினர் உடனடியாக கேரளா விரைந்து அவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.