ரூ. 2 ஆயிரம் நோட்டு அச்சிட தொடங்கிய பிறகு பதவிக்கு வந்த உர்ஜித் படேல் கையெழுத்து இடம்பெற்றது எப்படி?மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதற்கு மாற்று வழியாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்திலும், புதிய ரிசர்வ் வங்கி கவர்னரான உர்ஜித் படேல் கையெழுத்தே உள்ளது.இவர் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி தான் கவர்னராக பொறுப்பேற்றார்.

அவ்வாறு இருக்கையில், புதிய நோட்டுகள் 6 மாதத்திற்கு முன்னதாக அச்சடிக்கப்பட்டிருந்தால் அப்போதைய கவர்னர் ரகுராம் ராஜன் கையெழுத்தல்லவா இருந்திருக்க வேண்டும்.
இவர் கையெழுத்து எப்படி வந்தது என சந்தேகம் எழுப்பி பெரும்பாலானோர் சமூக வலைதளத்தில் பதிவுகளை மேற்கொண்டு இருந்தனர். இது குறித்து ஊடகங்கலீல்ச் எய்தியும் வெளியானது.

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி பற்றி, தந்திடிவி பெற்ற விவரங்கள் வருமாறு:-

* புதிய 2000, 500 ரூபாய் நோட்டுக்களின் வடிமைப்பை 2016 மே 19ம் தேதி மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்தது.

* 2016 ஜூன் 7ம் தேதி புதிய ரூபாய் நோட்டுக்களுக்கான வடிவமைப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

* 2016 ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணி தொடங்கியதாகவும்,
புதிய 500 ரூபாய் அச்சிடும் பணி நவ. 23ல் தொடங்கியதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

*ஆகஸ்ட் 22ம் தேதி ரூ .2000 நோட்டுகள் அச்சிட தொடங்கிய நிலையில், செப்டம்பர் 4ல் ரிசர்வ் வாங்கி ஆளுநராக பொறுப்பேற்ற உர்ஜித் படேல் அதில் கையெழுத்திட்டது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.

*இதுவரை எவ்வளவு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.

* ஆகஸ்ட் 22ம் தேதி ரூ .2000 நோட்டுகள் அச்சிட தொடங்கிய நிலையில், செப்டம்பர் 4ல் ரிசர்வ் வாங்கி ஆளுநராக பொறுப்பேற்ற உர்ஜித் படேல் அதில் கையெழுத்திட்டது எப்படி?

* நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, புதிய 500 ரூபாய் அச்சிட நவம்பர் 23 வரை தாமதம் ஆனது ஏன்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.