துபாயில் 2016 ஆம் ஆண்டு நடந்த பைக் விபத்துகள் - ஒரு சிறப்பு பார்வை !'நாம் மற்றவர்கள் மீது மோதினாலும் அல்லது மற்றவர்கள் நம் மீது மோதினாலும் இழப்பு நமக்குத் தான்' என இந்தியாவில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் சொல்வோமல்லவா அந்த வசனம் அப்படியே துபையில் பைக் ஒட்டுனர்களுக்கும் பொருந்தும்.

துபையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்துக்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 122 பைக் விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 137 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் 16 வயது முதல் 25 வயதுடைய இளைஞர்களே அதிகம்.

மேலும் 2015 ஆம் ஆண்டு பைக் விபத்தில் 10 பேர் மட்டுமே பலியாகியுள்ள நிலையில் 2016 ஆம் ஆண்டு பலி எண்ணிக்கை 17 ஆகவும் உயர்ந்துள்ளது. இவர்களில் பலர் உணவகங்களில் பணிபுரியும் டெலிவரி பைக் ஓட்டுனர்களே.

பொதுவாக, பைக் விபத்துக்கள் அதிக வேகம், பைக்குகளுக்கென்று சீட் பெல்ட் இல்லாமை, பலர் முறையாக ஹெல்மெட் அணியாததுடன் பிரதான காரணமாக போக்குவரத்து சட்டதிட்டங்களை அறியாமல் நெரிசல் மிகுந்த வாகன போக்குவரத்தின் குறுக்கு நெடுக்காக பைக்கை வெட்டி ஓட்டிச் செல்வது போன்றவையே என்றாலும் கார் ஓட்டுனர்களின் வழி கொடுக்காத ஒருவகை திமிரான மனப்பான்மையே காரணம் என பைக் ஓட்டுனர்களும் பதிலுக்கு குற்றம் சாட்டுகின்றனர்.

உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களின் பைக் ஓட்டுனர்களுக்கு தேவையான போக்குவரத்து விதிகள் பற்றிய பயிற்சிகளை கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என மேற்காணும் புள்ளிவிபரங்களை வெளியிட்டு துபை போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.