துபாயில் 21 மாதங்களுக்குப் பின் கோமாவிலிருந்து நினைவு திரும்பிய பெண் ! பொதுவாக கோமாவில் வீழ்ந்தவர்களுக்கு மீண்டும் நினைவு திரும்புவது அபூர்வ நிகழ்வாகும். துபையில் ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவரும் 2 குழந்தைகளுக்கு தாயுமான 35 வயதுடைய பெண் பெர்லைட் அல்மோன்டே (Perlite Almonte) என்பவர் துபை அரசின் அல் ராஷித் மருத்துவமனை மருத்துவர்களின் தீவிர தொடர் சிகிச்சைக்குப் பின் பூரண நினைவு திரும்பியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மயங்கி விழுந்து கோமா நிலையை அடைந்த இந்த பிலிப்பினாவுக்கு டாக்டர் ஜியாத் அல் ரைஸ் தலைமையிலான குழுவினர் சிறப்பு சிகிச்சையளித்து வந்தனர். கடந்த 2017 ஜனவரி மாதம் நினைவு திரும்பியவர் மேலும் சில நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு முற்றிலும் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தீவிர மறுவாழ்வு சிகிச்சை (Intensive Rehabilitation) மற்றும் ஆலோசணை பிரிவில் வைக்கப்பட்டுள்ள 'பெர்லி' விரைவில் நாடு திரும்பவும் தனது குழந்தைகளை காணவும் ஆவலாக உள்ளதாகவும் தனக்கு சிறப்பான சிகிச்சையளித்து கவனித்துக் கொண்ட அல் ராஷித் மருத்துவமனை மற்றும் மருத்துவக் குழுவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.