அதிரையில் 24 மணி நேர மருத்துவ சேவை துவக்கம் !
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அவசர சிகிச்சை மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலை தூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை தொலைதூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை ( பிஸ்மி மெடிக்கல்ஸ் அருகில் ) புதிதாக தீன் டயக்னாஸ்டிக் செண்டர் 24 மணி நேர மருத்துவ சேவை தொடங்கப்பட்டு பொதுமக்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதுகுறித்து தீன் மெடிக்கல்ஸ் நிறுவனர் சம்சுதீன் கூறுகையில்; அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் அவசர மருத்துவ சிகிச்சை பெரும் குறைவாக இருப்பதை கவனத்தில் கொண்டு ஓய்வு பெற்ற
மாவட்ட மருத்துவ அலுவலரும், மருத்துவ சேவையில் நீண்ட கால அனுபவமுள்ள டாக்டர் ஆர். ரெத்தினம் அவர்கள் மருத்துவ சிகிச்சை வழங்க முன்வந்துள்ளார். அவசர மருத்துவ சிகிச்சைக்காக அதிரையில் இவர் தங்கி இருந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஈசிஜி, இரத்த பரிசோதனை, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனை வசதி உள்ளது. இரவு நேரத்தில் அவசர சிகிச்சை தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுமக்களின் வரவேற்பை பொருத்து மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

24 மணி நேர மருத்துவ சேவை தொடர்புக்கு:
தீன் டயக்னாஸ்டிக் செண்டர் - 9788710281 / 9655983384Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.