ரூ.2.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஏழை ஆட்டோ ஓட்டுனர் மகன் முகம்மது சிராஜ்ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள்  வரும் ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. மே மாதம் 21 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெறுகின்றன.

இதில் பங்கேற்கும் உலக தர வீரர்களை வாங்கும் ஏலம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் உலகளவில், இந்திய அளவில் பல வீரர்கள் ஏலம் போகாமலும் சொற்பமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த முஹம்மது சிராஜ் என்ற 22 வயது வேகப்பந்து வீச்சாளர் நேற்றைய ஏலத்தில் ரூ.2.4 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் ஏழை ஆட்டோ ஓட்டுனரான முஹம்மது கௌஸ் என்பரின் மகனான இவர், இதில் கிடைத்த பணத்தின் மூலம் தனது பெற்றோருக்கு சொந்தமாக வீடு வாங்கி தருவேன் என்றும், திறமையாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.