முத்துப்பேட்டை அருகே காரில் கடத்தி சென்ற 2 இளம்பெண்கள் மீட்பு: வாலிபர் கைதுமுத்துப்பேட்டை அருகே காரில் கடத்தி சென்ற 2 இளம்பெண்கள் மீட்ட போலீசார் வாலிபர் ஒருவரை கைது செய்தனர். இது தொடர்பாக எடையூர் இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள வேப்பஞ்சேரியை சேர்ந்த காசிநாதன் மகள் சந்திரலேகா (வயது 21) அதே பகுதியை சேர்ந்த ராஜா மகள் கார்த்திகா (18) இவர்கள நேற்று மாலை பள்ளியில் படிக்கும் தங்களது உறவினர்கள் குழந்தைகளை அழைத்து வரசென்றனர்.

அப்போது அவர்களை எடையூர் அம்மலூர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் மகாதேவன் (24) அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து காரில் கடத்தி சென்றனர். இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

இதுபற்றி பொதுமக்கள் எடையூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி இளம்பெண்களை கடத்தி சென்ற காரை துரத்தி சென்றனர். இதில் அச்சம் அடைந்த வாலிபர்கள் காரில் இருந்த 2 இளம்பெண்களையும் வழியில் இறக்கி விட்டு காரில் தப்பி சென்று விட்டனர். இதில் மகாதேவனை போலீசார் பிடித்து கைது செய்தனர். இவர்மீது போலீசில் பல வழக்குகள் உள்ளன. அவர் 2 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் ஆவார். மேலும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இது தொடர்பாக எடையூர் இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முத்துப்பேட்டை அருகே காரில் கடத்தப்பட்ட 2 இளம் பெண்களை போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.