அமீரகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் !அமீரக தேசிய வானிலை மையம் அறிவித்துள்ள முன்னறிவிப்பின்படி, நாளை (திங்கட்கிழமை) காலையும் மறுநாளும் (செவ்வாய்கிழமை) பனிமூட்டம் காணப்படுவதுடன் தட்பவெப்பம் ஈரப்பதத்துடன் காணப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.

மணிக்கு சுமார் 32 கி.மீ வேகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு குளிர் காற்று வீசும். கடலோரப் பகுதிகளில் சீதோஷ்ணநிலை 11 டிகிரியிலிருந்து 21 டிகிரி செல்சியஸூம், நகரப் பகுதிகளில் 7 முதல் 23 டிகிரி செல்சியஸூம், மலைப்பிராந்தியங்களில் 15 டிகிரி முதல் -3 டிகிரி வரையும் இருக்கும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடற்பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும்.

அமீரகம் சில நாட்களாக கண்டுவரும் பலத்த காற்று, குளிர், புழுதிப்புயல், மழை, ஐஸ் மழை போன்றவற்றை ஆங்காங்கே மீண்டும் சந்திக்க நேரிடலாம்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.