துபாயில் 53 மில்லியன் திர்ஹத்திற்கு வீடு வாங்கிய இந்தியர் !துபையில் இந்தியாவைச் சேர்ந்த பெரும் வணிகர் ஒருவர் 39,000 மொத்த சதுர அடியில் வீடு மட்டும் 24,000 சதுர அடியில் அமைந்த புத்தம்புதிய வில்லா ஒன்றை 53 மில்லியன் (14.4 மில்லியன் டாலர்) திர்ஹத்திற்கு விலைக்கு வாங்கியுள்ளார்.

கால்பந்து மைதானத்தின் அளவில் பாதிக்கு மேல் நில அளவுள்ள இந்த சொகுசு வீட்டில் 6 படுக்கை அறைகள், ஒரு நீச்சல் குளம் மற்றும் கோல்ப் மைதானம் ஒன்றும் உள்ளது என்றாலும் அமீரகத்தில் குறைந்து வரும் வேலைவாய்ப்புக்கள், சரிந்து வரும் ரியல் எஸ்டேட் வியாபாரம், நிறுவனங்களின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் என ஒருபுறம் கீழ்நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில் இந்த இந்தியர் பெரும் விலைக்கு வில்லாவை வாங்கியுள்ளது ரியல் எஸ்டேட் துறையினரை பேராச்சரியப்படுத்தியுள்ளது.

துபை எமிரேட்ஸ் ஹில் (Dubai Emirates Hill) பகுதியில் வாங்கப்பட்டுள்ள இந்த வில்லாவின் இந்திய உரிமையாளரைப் பற்றிய விபரங்களை அந்தரங்க வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிட மறுத்துள்ளனர்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.