துபாயில் திருட்டில் ஈடுபட்டு சிக்கிய 6 இலங்கையர்களுக்கும் 5 ஆண்டுகள் சிறை.துபாயில்  இலங்கையை சேர்ந்த ஆறு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு இலங்கையர்களும் 26 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என அந்த நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

குறித்த இலங்கையர்கள் வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தல், நபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக அந்த நாட்டு நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

இவர்களில் ஒருவர் சாரதியாக அங்கு பணியாற்றியுள்ளதாகவும், ஏனையவர்கள் வேலையற்றவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த இலங்கையர்களில் நான்கு பேர் விமான நிலையத்தின் ஊடாக தப்பிச் செல்ல முற்பட்ட போது அந்த நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை காலம் நிறைவடைந்தப் பின்னர் குறித்த ஆறு பேரையும் நாடு கடத்த வேண்டும் என்றும் அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நண்பர்களுடன் பகிரவும்:
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.