துருக்கியில் பூமிக்கு அடியில் 600 வாசல்களுடன் 18 மாடி நகரம் (படங்கள்) நம்முடைய காலத்தில் பூமிக்கு மேல் விண்ணை முட்டும் கட்டிடங்கள் எழுப்பப்படுவதை பார்த்து வருகின்றோம் ஆனால் சுமார் 1000 வருடத்திற்கு முன்வாழ்ந்த நமது முன்னோர்கள் பூமிக்கு அடியில் 18 மாடி உயரத்திற்கு ஓரு வீட்டையல்ல ஒரு நகரையே சகல வசதிகளுடன் உருவாக்கும் வல்லமையை பெற்றிருந்துள்ளனர்.

துருக்கியின் இன்றைய டெரின்கியூ (Derinkuyu) நகரில் அடியில் சுமார் 85 மீட்டர் ஆழத்திற்கு குடைந்தெடுத்து நிர்மாணிக்கப்பட்ட இந்நகரில் சுமார் 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் வசிக்கலாம். மேலும் அவர்களுக்கு தேவையான உணவுகள் சேமிப்பு வசதிகள், கால்நடைகள், தொழுவங்கள், சமையலறைகள், தேவாலயம், கல்லறை, பள்ளி வகுப்பறைகள், சமுதாயக் கூடம், கிணறுகள் என நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளதுடன் தேவையேற்படின் ஒவ்வொரு தளத்தையும் மூடிக்கொள்ள பிரம்மாண்ட பாறைகளால் அமைந்த கதவுகள், இந்நகரத்தைச் சுற்றி எந்நேரமும் வெளியே சென்று வருவதற்கு வசதியாக சுமார் 600 மறைவான வாயில்கள் என தேவையான அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

போர்களால் சூழ்ந்திருந்த பைஸாந்தியப் பேரரசின் ஆட்சிகாலமான (Byzantine Era) கி.பி 780 – 1180 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த நிழவறை நகரம் போர்க்காலங்களில் மக்களை காக்கும் பதுங்கு குழிகளாகவே (Bunkers) திகழ்ந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர்.

இதைபோல் துருக்கியின் கப்படோசியா (Cappadocia) பிராந்தியத்தில் காணப்படும் பிற நிலத்தடி நகரங்களையும் பல மைல் தூரத்திற்கு பூமிக்கடியில் செல்லும் சுரங்கப்பாதையின் மூலமும் இணைத்துள்ளனர்.

1963 ஆம் ஆண்டு துருக்கியர் ஒருவர் தனது வீட்டை செப்பனிடுவதற்காக தோண்டியபோது எதேச்சையாக தன் வீட்டுக்கு அடியில் இந்நகரத்தை கண்டுபிடித்தார். தற்போது சுற்றுலாவாசிகளின் வசதிக்காக மின்மயப்படுத்தப்பட்டுள்ள இந்நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கும் செல்ல சுற்றுலாவாசிகள் அனுமதிக்கப்படுகின்றனர், சில பகுதிகளில் கட்டிடத்தின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Source: Mirror / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.