92 வயதில் பெண் குழந்தைக்கு தந்தையான முதியவர் ! அல்லாஹ் மிகப்பெரியவன்பாலஸ்தீன், மேற்குக்கரை (West Bank) பிரதேசத்தின் அல்கலீல் (Al khalil) என்ற பகுதியை சேர்ந்தவர் 92 வயது முதியவர் மஹ்மூது அல் ஆதம், ஏற்கனவே 7 பெண்களும் 5 ஆண்களும் வாரிசாக உள்ள நிலையில் 8 வது பெண் குழந்தைக்கு தனது 92 வது வயதில் தந்தையானார்.

முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் 42 வயதுடைய அபீர் என்ற பெண்ணை மணமுடித்தார், இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதுடன் அபீர் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. அபீருக்கு முதல் திருமணம் மூலம் குழந்தை ஏதும் இல்லாத நிலையில் தற்போது 42 வயதை கடந்த நிலையில் குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பது அவருக்குப் பெரும் மகிழ்வை தந்துள்ளது.

குறிப்பு: பாலஸ்தீனம் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் வயதான காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது பண்டைய காலத்திலிருந்து இறையருளால் இயல்பான ஒன்றே, இறைத்தூதர்களான ஜக்கரியா (அலை) அவர்களும், நபி இப்ராஹீம் ( அலை ) அவர்களும், அவர்தம் மனைவிமார்களும் மிகவும் முதிய வயதை அடைந்த பின்பே குழந்தைப்பேறு கிடைக்கப் பெற்றுள்ளனர்.

உதாரணத்திற்கு, நபி ஜக்கரியா (அலை) அவர்களும் அவரது மனைவியும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்டதை பற்றி குர்ஆனில் வரும் வசனங்கள்:

19:4. (ஜகரிய்யா) கூறினார்: 'என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.

19:7. 'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' (என்று இறைவன் கூறினான்).

19:8. (அதற்கு அவர்) 'என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?' எனக் கூறினார்.

19:9. '(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்' என்று இறைவன் கூறினான்.

Source: http://english.alarabiya.net/
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.