அதிரையில் மர்ம காய்ச்சலுக்கு டீ வியாபாரி பலி !தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுப்ரமணிகோவில் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் நாகராஜ் (வயது 59). அதிராம்பட்டினம் பகுதிகளில் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக மர்ம காய்ச்சலால் உடல் நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். இப்பகுதியில் பிளிச்சிங் பவுடர், பினாயில் தெளித்தனர். மேலும் இப்பகுதியினரை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.