டொனால்டு டிரம்ப் அபாயகரமான புதுவரவு : ஈரான் அதிபர் கடுமையான விமர்சனம்!அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு அபயகரமான புதுவரவு என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்று உள்ள டொனால்டு டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் பல்வேறு தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உலகின் எந்தவொரு நாட்டில் இருந்தும் வரும் அகதிகள், அமெரிக்காவில் நுழைவதற்கு 4 மாதம் தடை. சிரியா அகதிகள், குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்கிற வரையில், அதாவது மறு உத்தரவு பிறப்பிக்கிற வரையில் அமெரிக்காவினுள் நுழைய முடியாது. ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடு-களை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தம் என்ற டிரம்பின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

இவ்விவகாரத்தில் அமெரிக்காவிற்கு எதிரான தீவிர நடவடிக்கையை ஈரான் கையில் எடுத்து உள்ளது. அமெரிக்காவிற்கு ‘புதிய பதற்றத்தை ஏற்படுத்த கூடாது’ என ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஜாரிப், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் 7 நாடுகளுக்கு தடைவிதிக்கும் டொனால்டு டிரம்ப் முடிவானது “பயங்கரவாதிகளுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாகும். ஒட்டுமொத்தமாக பாகுபாடு காட்டப்படுவது பயங்கரவாதிகள் ஆட்சேர்ப்புக்கு உதவியாக அமையும்,” என்று எச்சரித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பயணிகளுக்கு விதித்து உள்ள கட்டுப்பாடானது இருதரப்பு நட்புறவில் அடிப்படையின்மையை காட்டுகிறது என்றும் கூறினார்.  அமெரிக்காவிற்கு பதிலடியை கொடுக்கும் வகையில் அந்நாட்டவர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுபாடு கொண்டு வரப்படும் என ஈரான் சபதமிட்டு உள்ளது. ஈரான் வருவதற்கு அமெரிக்கர்களுக்கு விசா வழங்கப்படாது என்ற தெக்ரான் முடிவானது, பதிலடி நடவடிக்கை கிடையாது. அதிகாரப்பூர்வ விசா பெற்றவர்கள் ஈரானுக்கு வரலாம் எனவும் ஜாரிப் கூறி உள்ளார். டொனால்டு டிரம்பின் அதிரடி நடவடிக்கையானது சர்வதேச அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு அபயகரமான புதுவரவு என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறிஉள்ளார்.  இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளுக்கு எதிரான கொள்கையை கொண்டு உள்ள டொனால்டு டிரம்பை கடுமையாக ஹசன் ரூஹானி விமர்சனம் செய்து உள்ளார் என்று ஈரான் அரசு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. டொனால்டு டிரம்ப் மற்றும் அவருடைய அரசு நிர்வாகிகள் புதுவரவு, அவர்களுக்கு அரசியல் தெரியாதும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். “மற்றொரு உலகில் வசிக்கும் ஒருவர், அரசியல் உலகிற்குள் புதியதாக நுழைந்து உள்ளார்,” என்று ஹசன் ரூஹானி பேசி உள்ளார். டொனால்டு டிரம்ப் அமெரிக்காவிற்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில் முடிப்பார் என்றும் கூறி உள்ளார் ஹசன் ரூஹானி.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.