பன்றிக்காய்ச்சல் எப்படி பரவுகிறது.. தடுப்பது எப்படி.. சந்தேகங்களும், விளக்கங்களும்.. –கேள்வி – ஏன் இதற்கு பன்றிக்காய்ச்சல்  என பெயரிடப்பட்டது ?

பதில்-  இந்தக்  காய்ச்சல்  முதன்முதலில்  பன்றிகளிடம் அதிகளவு காணப்பட்டதால் இதற்கு அந்தப் பெயர் கொடுக்கப்பட்டது..  இந்த வைரஸ் , பன்றிகள் மூலமாக  மனிதர்களைத் தாக்கினாலும், பிறகு   பாதிக்கப்பட்ட நபரின் சளி , இருமல், தும்மல் மூலமாக சக மனிதர்களுக்குப் பரவும்.

கே -இது எய்ட்ஸ்  , எபோலா போன்றதொரு கொடிய வைரஸா ?

ப-  இல்லவே இல்லை..இது ஒரு சாதாரணமான  வைரஸ் கிருமி தான்.பனிக்காலங்களில் இதனின் உக்கிரம் சற்று அதிகமாக காணப்படுவதால் ,நாம்  விழிப்புடன் இருப்பது நல்லது!

கே -இந்த வைரஸ் யாரை எல்லாம்  தாக்கும்?

ப- பொதுவாக நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களை இந்த வைரஸ் எளிதாகத் தாக்கும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் , கர்ப்பிணி தாய்மார்கள்,  சர்க்கரை நோயாளிகளிடம் இந்த பாதிப்பு அதிகளவில் காணப்படும்.  இருப்பினும் பனிக்காலங்களில், இந்த வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் ,.

கே -இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து எப்படி தப்பிப்பது ?

ப- இந்த  வைரஸ், பாதிக்கப்பட்ட நபரின் சளி , இருமல், தும்மல் மூலமாகத் தான் சக மனிதர்களுக்குப் பரவுகின்றது.

1.எனவே , பொது இடங்களில் இருமல் , மற்றும் தும்மல் வரும்போது மற்றவர்கள் மேல் படாதவாறு ஒரு துணி  , கர்சீப் அல்லது டிஷூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்..

2. நாம் பயன்படுத்திய துணி , கர்சீப் , டிஷூ பேப்பரை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் ஒரே துணி மற்றும் கர்சீபை  பல நாட்கள்  பயன்படுத்துவதும் தவறு.அவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்தப்பின் தான் மறுபடியும் பயன்படுத்த வேண்டும்.

3. ஒரே வீட்டில் உள்ள நபர்கள் , அவர்களுக்கென்று தனித்தனியாக டவல் , கர்சீப் , சோப்புகளை பயன்படுத்த வேண்டும்.. குழந்தைகளை கையாளும் முன்னர் , கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

4.யாருக்காவது சற்று அதிகமாக சளி , இருமல் இருப்பின் அவர்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருக்கக்கூடாது.குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்ட நபரை  3-7 நாட்கள்வரை பார்க்காமல் இருப்பதே நல்லது..

5.குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலின் அறிகுறி இருந்தால் , அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு  5 நாட்கள் வரை அனுப்புவதை தவிர்க்கவேண்டும். (ஒரு வாரம் அவர்களுக்கு ஓய்வு மிக அவசியம்.. பெற்றோர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கவேண்டும்).

6. மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு செல்வதை  குறைத்துக்கொள்ள வேண்டும். (கோவில்கள், திரை அரங்குகள் , மார்கெட், நெடுதூர இரயில், பேருந்து பயணங்கள் போன்றவை)

கே -பன்றிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் என்ன?
ப-  சாதாரண காய்ச்சல் , சளி , இருமல், தொண்டை கரகரப்பு , உடம்பு வலி , தலைவலி , குளிர்காய்ச்சல் , மற்றும் சிலருக்கு வாந்தி , பேதி கூட இருக்கலாம்..
இவை அனைத்தும் 99 % நபர்களுக்கு ஒரு வாரத்தில் குணமடைந்து விடும்.

கே – மருத்துவமனைகளில் கிடைக்கும் அறுவை சிகிச்சை மாஸ்க் பயன்படுத்தினால் , இந்த வைரஸ் பரவுவதை தடுக்க முடியுமா?

ப-   அறுவைசிகிச்சை மாஸ்க் பயன்படுத்துவது பயன்அளிக்காது..ஏனெனில்   இந்த வைரஸுகளை அதுமுழுமையாக கட்டுப்படுத்தாது.. மேலும் இரண்டு மணிநேரத்திற்கு மேல்  ஒருமுறை அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.. மேலும் , அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.. எனவே சாதாரண சர்ஜிகல் மாஸ்க் கை நோய்தடுப்பிற்காக உபயோகிப்பது வீண்.. ழி-95 என்ற சிறப்பு மாஸ்க்கை பயன்படுத்தலாம்..

கே -இந்த  பன்றிக்காய்ச்சலுக்கு வைத்தியம்  என்ன? கண்டிப்பாக மருத்துவரை நாட வேண்டுமா ?

ப- முதலாவது  மற்றும் முக்கியமானது ,முழுமையான ஓய்வு  பிறகு தங்குமிடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் – பயன்படுத்திய கர்சீப் , துணிகளை முறையாக அப்புறப்படுத்துதல் , அதிகளவு தண்ணீர் குடித்தல்( 2-, 3 லிட்டர் ), எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை உண்ணுதல் போன்றவையே 99%பன்றிக்காய்ச்சலை குணப்படுத்திவிடும்.. காய்ச்சலுக்கு பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தலாம்..ஆண்டிபயாடிக் மருந்துகள் பெரிதாகப் பயன்தராது..

கே – எப்போது மருத்துவரை /மருத்துவமனையை அணுகவேண்டும் ?

ப- மேற்கூறிய அறிகுறிகளுடன் , முச்சுத்தினறல் இருந்தாலோ , அல்லது அதிகப்படியான காய்ச்சல்  -தலைவலி-வாந்தி – குளிர்காய்ச்சல் இருந்தாலோ(குறிப்பாக குழந்தைகளுக்கு) மருத்துவர்களை அணுகவேண்டும். .Oseltamavir (Tamiflu) மாத்திரைகளை சாப்பிட்டால் பன்றிக்காய்ச்சல்  குணமாகும்.

கே – தடுப்பூசிகள்  பயன் அளிக்குமா ? அவசியம் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டுமா ?

ப-  பொதுவாக குளிர்காலம் துவங்குவதற்கு 15 நாட்கள் முன்னே , தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்… சமுதாயத்தில்  பன்றிக்காய்ச்சல் பரவிய பின்னர் , தடுப்பூசி போட்டுக்கொள்வது  அந்தளவிற்கு பயன்தராது.. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இந்த தடுப்பூசிகளை கட்டாயம்
போட்டுக்கொள்வது நலம்..

2009 ஆம் ஆண்டு உலகம்  முழுக்க வந்த  பன்றிக்காய்ச்சலை pandemic) விட தற்பாேதைய 2017  (seasonal flu) காய்ச்சலின்  வீரியம் மிகவும் குறைந்தது தான்..

பன்றிக்காய்ச்சல் குறித்தான  செய்திகளை உங்கள் நண்பர்களிடத்தில் பகிருங்கள் ! அதன்மூலம்  முழுமையான விழிப்புணர்வை  சமுதாயத்தில் ஏற்படுத்துவோம் !

பன்றிக்காய்ச்சல் மேல் உள்ள அச்சங்களைப் போக்குவோம்!
பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்போம்!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.