இஸ்லாத்தை சீண்டும் ஜி டி வி லக்சுமி ராமகிருஷ்ணன் - ஜி டி விக்கு கண்டனம்தந்தையை இழந்த ஏழை இஸ்லாமிய பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞரை காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் முடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின் கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரால் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகி ஜி தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

கணவரின் குடும்பத்தினரால் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானதாக கண்ணீர்மல்க கூறினார்.
தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கான தீர்வையும் நியாயத்தையும் பெற்றுக்கொள்வதில் தவறு இல்லை, ஆனால் இந்த பெண்ணோ இஸ்லாமிய சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்கிறார். இவருக்கு ஆதரவாக நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனும் ஒத்து ஊதியுள்ளார்.

இதே சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான இந்து பெண்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறியபோது இந்திய சட்டத்தையோ அல்லது இந்து மதத்தின் சட்டத்தையோ ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னதில்லை,
மாறாக இஸ்லாமியர்கள் அநீதிக்கு உள்ளாகியிருந்தால் இஸ்லாமிய சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை ?

இந்து மதத்தினரை விட மூன்று மடங்கு அதிகம் கொண்ட இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். உலகம் முழுவதும் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய சட்டம் எங்கோ ஒரு மூலையில் ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் இஸ்லாமிய சட்டப்படி நீதி வழங்கப்படவில்லை என்றும் நிர்வாகிகள் தவறு செய்துள்ளார்கள் என்றும் கூற வேண்டிய பெண்ணும், நிகழ்ச்சியாளர்களும் இஸ்லாமிய சட்டத்தையே தவறான சட்டம் போன்று சித்தரித்து கொச்சைப்படுத்த நினைப்பது கேவலமான செயல்.
இஸ்லாத்தில் வரதட்சணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காதலித்தவரை திருமணம் முடிப்பதற்காக இஸ்லாத்தில் தடை விதிக்கப்பட்ட வரதட்சணையை கொடுத்து, அதிலும் பெண்ணின் வீட்டில் பல ஆண்டுகள் புழக்கத்தில் இருந்த பிரிட்ஜை கூட விட்டு வைக்காத குடும்பத்திற்கு வரதட்சணை கொடுத்து காதலனுக்காக இஸ்லாமிய சட்டத்தையே காற்றில் பறக்க விட்டு திருமணம் முடித்துள்ளார்.
இந்த பெண் சொல்வது உண்மையாக இருந்தால் மணமகன் வீட்டார் துளி கூட இஸ்லாத்தை பின்பற்றவில்லை,

இரு வீட்டாரும் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றாமல் தங்களுக்குள் பிரச்சினை என்றவுடன் இஸ்லாமிய சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பது கேவலமான செயல். இதுவே அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் நல்லபடியாக வைத்திருந்தால் இஸ்லாமிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பாரா ?
அந்த பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த பெண்ணுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். மேலும் கணவரையோ அல்லது கணவரின் குடும்பத்தினரையோ அழைக்காமல் ஒரு தரப்பு செய்தி வெளியிட்டு இஸ்லாத்தின் மீது போர் தொடுப்பது குரூர மனப்பான்மையாகும்.

இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் க்ஷரியத் சட்டத்தின் படி ஆலோசனை செய்து இப்பிரச்சினைக்கு இஸ்லாமிய சட்டமான குர்ஆனும், நபிகள் நாயகமும் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்டு அதை தீர்வாக சொல்லி நிகழ்ச்சியை ஒளிபரப்பியிருக்க வேண்டும்.
அதை விடுத்து இஸ்லாமிய சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று குரோத மனப்பான்மையில் செயல்பட்டால் இஸ்லாமிய சமுதாயம் ஜீ தமிழ் தொலைக்காட்சியை முற்றுகையிட்டு புரட்சி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.