அதிரையில் குறைந்த கட்டணத்தில் ஜனாஸா மரக்கட்டைகள் விற்பனை !தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின்
சார்பில் ஏழை, எளிய, நலிவடைந்த உள்ளூர் பொதுமக்கள் பயனுறும் வகையில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டம், ஏழை மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவி, சிறுவர்களுக்கு ஹத்னா செய்தல், ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட சேவைப்பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இவ்மைப்பின் மற்றுமொரு சேவை திட்டமாக ஜனாஸா ( இறந்த உடல் ) நல்லடக்கத்திற்கு பயன்படுத்தும்  தரமான மரக்கட்டைகள் குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு செட் விலை ரூ. 860 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வித லாப நோக்கமின்றி செயல்படும் இத்திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

தேவையுடையோர் அதிரை பைத்துல்மால் சேவை அலுவலகத்தை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு:
04373 241 690
9944783344 / 8148871797

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.