முத்துப்பேட்டை அருகே பெண் பாலியல் பலாத்காரம் வாலிபர் கைதுபெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதற்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம். கோவையில் வேலைபார்த்து வருகிறார். இவரது  மனைவி சுதா (32) தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு அதே ஊரை சேர்ந்த வடிவேல் மகன் மோகன் சங்கர் (38). என்பவர் சுதா, வீட்டுக்குள் புகுந்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாக கூறப்படுகிறது. இதில் சுதா சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் மோகன் சங்கர் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன் சங்கரை கைது செய்தனர். பின்னர் அவரை திருத்துறைப்பூண்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.