துபாயில் நவீன ரக தானியங்கி பறக்கும் வின்வாகன பரிசோதனை வெற்றி ! துபை போக்குவரத்துத் துறையும் (RTA), EHANG என்கிற சீன நிறுவனம் ஒன்றும் கூட்டாக தயாரித்துள்ள புதிய வகை தானியங்கி பறக்கும் வின்வாகனம் (Autonomous Aerial Vehicle - AAV) வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. EHANG 184 எனப் பெயரிடப்பட்டுள்ள ஒருவர் மட்டும் பயணிக்கும் இந்த புதிய வகை வாகனம் எதிர்வரும் 2017 ஜூலை மாதம் முதல் துபையில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

சிறம்பம்சங்கள்:
AAV வின்வாகனம் தொடுதிரை (Touch Screen) தொழில்நுட்பத்தில் எதிஸலாத்தின் 4G அலைவரிசையில் இயங்கக்கூடியது.

தற்போது ஒருவர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் EHANG 184 வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி வின்வாகனம் தரைக்கட்டுப்பாட்டு அறையுடன் பறக்கும் நிலையில் எப்போதும் தொடர்பில் இணைக்கப்பட்டிருக்கும்.

பயணி இதில் அமர்ந்ததும் தான் செல்ல வேண்டிய இடம் குறித்து முன்தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தை திரையில் தேர்வு செய்துவிட்டால் போதும் வாகனம் தானே இயங்கத் துவங்கி துபை மாநகருக்கள் உள்ள அந்த இடத்தில் சரியாக கொண்டு சேர்க்கும். (The EHANG 184 vehicle is fitted with a touchscreen to the front of the passenger seat displaying a map of all destinations in the form of dots)

இந்த தானியங்கி வின்வாகனத்தை இயக்க எந்த சிறப்புப் பயிற்சியும் தேவையில்லை மேலும் சுமார் 3,000 அடி உயரத்தில் பறக்கக்கூடியது.

தற்போது தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு அதிகபட்சமாக 160 கி.மீ வேகத்திலும் சராசரியாக 100 கி.மீ வேகத்திலும் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

AAV வின்வாகனம் மேலே எழும்பும் போது நொடிக்கு 6 மீட்டர் உயரத்திற்கும், தரையிறங்கும் போது நொடிக்கு 4 மீட்டருக்கும் தாழ்ந்து தரையிறங்கும்.

இதன் வெற்று வாகன எடை 250 கிலோவும், பயணியுடன் அதிகபட்சம் 350 கிலோ வரை இருக்கும், இதன் பேட்டரிகளை 1 லிருந்து 2 மணிநேரத்திற்குள் மீண்டும் ரீசார்ஜ் செய்துவிடலாம்.
இடி,மின்னல் தவிர்த்த மற்ற அனைத்து கால நிலைகளிலும் பறக்கும் தன்மையுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் மாற்று வாகனம் என்ற திட்டதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது.

Source: Emirates 247
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.