இறைவனுக்கு செலுத்தக்கூடிய சிறந்த வணக்கம் எது?நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்கும் படைக்கவில்லை. (திருக்குர்ஆன் 51:56)

இந்த வசனத்தை படித்தபின் பெரும்பாலானவர்களின் எண்ணங்களில் வெறும் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பம் தோன்றும். கூடவே இவற்றை மட்டும் செய்வதற்காகவா நம்மை இறைவன் படைத்தான் என்ற சந்தேகங்கள் கூட எழும்.

உண்மையில் 24 மணி நேரத்தில் 5% மட்டுமே தொழுகைக்காக ஒதுக்கப்படுகிறது. எனில் மீதி நேரம்? வருடத்தின் மாதங்களைக் கணக்கிட்டால் 8.5% மட்டுமே நோன்புக்காக ஒதுக்கப்படுகிறது. எனில் மீதி நேரம்?

ஜகாத் என்பதோ வருடத்தில் ஒருமுறை மட்டுமே. எனில் மீதி நேரம்? ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே. எனில் மீதி நேரம்? எனவே வணக்கம் என்பது வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல.

மாறாக, ஓர் ஏழைக்கு உணவளிக்கும்போது நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய். மத வேறுபாடு பார்க்காமல் மனிதனின் கண்ணீர் துடைக்கும்போது நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய். அமானிதம் பேணி அடுத்தவர் உரிமையில் கை வாக்காமல் இருக்கும்போது நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்.

உன் நாவால் பிறரை மன வேதனைக்கு உள்ளாக்காமல் இருக்கும்போது நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய். மலர்ந்த முகத்துடன் மக்களைச் சந்திக்கும்போது நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்.

கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கும்போது நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய். லஞ்சம் வாங்க மறுக்கும் லட்சியவாதியாக மாறும்போது நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்.

இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் இப்படித்தான் பட்டியலிடப்படுகிறதே தவிர, வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல என்பதை ஒவ்வொரு புரிந்து, வணக்கங்களில் ஈடுபட வேண்டும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.