துபாயில் உலகின் முதன் முதலாக முற்றிலும் சுழலும் டவர் கட்டிடம் !சுழலும் உணவகங்கள் (Rotating Restaurants) கட்டிடங்களின் மாடியில் அல்லது ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதையே பார்த்துள்ளோம் என்றாலும் முற்றிலும் சுழலும் கோபுர ஹோட்டல் (Fully Rotating Tower) ஒன்றை நிர்மாணித்திடும் அறிவிப்பு துபையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு இன்று வரை அந்த முயற்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

தற்போது இத்தாலிய கட்டிட வடிவமைப்பாளர் டேவிட் பிஷ்ஷர் என்பவரின் வடிவமைப்பின்படி, டைனமிக் டவர் (Dynamic Tower) எனும் 80 மாடி கட்டிடம் ஒன்று சுமார் 420 மீட்டர் உயரத்தில் மொத்தம் 1.2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 4D தொழிற்நுட்பத்தில் உருவாக்க புதிய திட்டம் ஒன்று கருக்கொண்டுள்ளது.

நிரந்தர வடிவத்தில் இல்லாமல் எப்போதுமே வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அதன் திசைகளில் ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட்டும் தனித்தனியாக மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய விரும்பும் வேகத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும்  (It is the first building that continues to change and never look the same) இந்த டைனமிக் டவர் கட்டிடம் உலகிலேயே முதன்முதலாக துபையில் தான் அமையவுள்ளது.

மேலும், ஒவ்வொரு தளத்திலும் தலா ஒரு காற்றாலையுடன் மாடியில் சூரிய ஒளி மின் தகடுகளும் பொருத்தப்பட்டு இக்கட்டிடத்திற்கு தேவையான மொத்த மின்சாரமும் இதிலேயே உற்பத்தியும் செய்யப்படவுள்ளது.

சுமார் 3 பில்லியன் டாலர் (11 பில்லியன் திர்ஹம்) செலவில் உருவாக்கப்படும் இந்த டவரின் ஒவ்வொரு அப்பார்ட்மெண்டும் தற்போதே 30 மில்லியன் டாலருக்கு (110 மில்லியன் திர்ஹம்) விலைபோய் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் போது ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் நட்சத்திரக் குறியீடுகளை எல்லாம் தாண்டிய நவீன டவராக விளங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை நிறைந்த சூழலுக்கிடையில் எளிமையாய் அமைந்த, தென்றல் தாலாட்டும் ஓலைக்குடிசை தரும் சுகம் இதில் கிடைக்குமா! உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.