விமானம் புறப்படும் நேரத்தில் அவசர வாயிலை திறந்த பயணி !மும்பையிலிருந்து சண்டீகர் செல்லவிருந்து இன்டிகோ விமானத்தில் வீற்றிருந்த பயணி ஒருவர், 176 பயணிகளுடன் விமானம் புறப்படவிருந்த நிலையில் திடீர் என தன்னருகில் இருந்த ஆபத்து காலத்தில் மட்டும் திறக்கப்பட வேண்டிய அவசரவழியை (Emergency Exit) திறந்ததால் விமானிகள், பயணிகள் மற்றும் மும்பை விமான நிலையம் என அனைவரும் தேவையற்ற பீதிக்குள்ளாயினர்.

இந்த சம்பவத்தால் விமானம் மீண்டும் புறப்பட 2 மணிநேரம் தாமதமானது. அனாவசியமாக அவசரவழியை திறந்த அந்தப் பயணியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (ஒருவேளை பான்பராக் எச்சிலை துப்ப திறந்திருப்பாரோ?)

இதற்கிடையில், அமெரிக்காவின் நியூயார்க் நகர ஜான் எப் கென்னடி விமான நிலையத்திலிருந்து (JFK Airport) அர்ஜென்டினாவின் புவனெஸ் அயர்ஸ் (Buenos Aires) விமான நிலையத்திற்கு புறப்படவிருந்த அர்ஜென்டினா ஏர்லைன்ஸ் திடீர் என எஞ்சின் கோளாரால் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இழப்புகள் குறித்து தகவல்கள் இல்லை.

Sources: Khaleej Times / Mirror / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.