மூக்கில் நுழைந்து மூளை அருகில் உலாத்திய கரப்பான்… உயிருடன் வெளியே எடுத்த அரசு மருத்துவர்கள்பெண்ணின் மூக்கில் நுழைந்து மூளைக்கு அருகில் உலாத்திக் கொண்டிருந்த கரப்பான் பூச்சியை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் நவீன முறையில் வெளியே எடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நிவாரணம் கிடைத்தது

எப்போதாவது அரிதாக நடைபெறும் சில சம்பவங்கள் உண்டு. அதுபோன்று தூங்கும் போது மூக்கின் வழியே சென்று மூளைக்கு அருகில் உலவிக் கொண்டிருந்த கரப்பான் மூச்சியை அறுவை சிகிக்சை இன்றி உயிருடன் வெளியே எடுத்துள்ளனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

சென்னையை அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருகிறார் செல்வி. 42 வயதான இவர், கடந்த 31ம் தேதி வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, இரவு 11.30 மணியளவில் அவரது மூக்கில் ஏதோ நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு எழுந்தார். மூக்கில் எரிச்சல், அரிப்பு, வலி உள்ளிட்ட தொந்தரவுகள் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த செல்வி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு நள்ளிரவில் சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் செல்விக்கு மூக்கில் சதை வளர்ந்திருக்கும் என்று சந்தேகமாக கூறப்பட்டது. அவர்கள் கொடுத்த மருந்தை சாப்பிட்டும் செல்விக்கு வலி குறையவில்லை.

மூளையில் கரப்பான்
வலியை தாங்க முடியாத செல்வி அருகில் இருந்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கும் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட ஸ்கேனில் செல்வியின் மூளைக்கு அருகில் கரப்பான் இருப்பது தெரியவந்தது.

வசதி இல்லை
மூளை அருகில் கரப்பான் இருப்பது தெரிய வந்தவுடன் செல்வி பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதைவிட அவரை மேலும் அதிக அதிர்ச்சிக்குள்ளாக்கியது தனியார் மருத்துவமனையில் அதனை எடுக்க வழிவகை இல்லை என்பதுதான். அதனால் அவர் உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

அசத்தும் அரசு மருத்துவமனை
இதையடுத்து, செல்வி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேற்று காலை சென்றார். காது, மூக்கு தொண்டை பிரிவு டாக்டர்கள் எம்.என்.சங்கர், முத்து சித்ரா ஆகியோர் மூக்கு உள்நோக்கு கருவி மூலம் அவரை பரிசோசதனை செய்தனர். அப்போது மூளையின் அடிப்பகுதியில் கரப்பான் பூச்சி உயிரோடு உலாத்திக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.


கரப்பான் வெளியேற்றம்
மருத்துவமனையில், வேக்கம் சக்ஷன் கருவி மூலம் கரப்பான் பூச்சியை வெளியே எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. பின்னர், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மூக்கு உள் நோக்குக் கருவி மூலம் கரப்பான் பூச்சி உயிருடன் வெளியே எடுக்கப்பட்டது.

வலி நீங்கி மகிழ்ச்சி
எந்த வித அறுவை சிகிச்சையும் இன்றி நவீன கருவிகள் மூலம், மூளையின் அருகில் இருந்த கரப்பான் பூச்சி நீக்கப்பட்டதால் செல்விக்கு வலி தீர்ந்தது. இதனால் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.